செய்திகள் மாநில செய்திகள் சண்டிகர் குடும்ப நல நீதிமன்றம்…மருமகனை துப்பாக்கியால் சுட்ட மாமனார்…!!! Sathya Deva3 August 20240117 views முன்னாள் போலீஸ் அதிகாரியான மல்விந்தர் சிங் சித்துவுக்கும் அவரது மருமகன் ஹர்பித் சிங் குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என மல்விந்தர் சிங் கேட்டுள்ளார். அதற்கு அவர் மருமகன் வழிகாட்ட கூட சென்றுள்ளார். சிறிது நேரத்தில் நீதிமன்றத்தின் உள்ளேயே துப்பாக்கி சூடும் சத்தம் திடீரென்று கேட்டது. அப்போது மாமனார் மல்விந்தர் சிங் மருமகனை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் ஐந்து குண்டுகள் பாய்ந்து மருமகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை கண்டதும் அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓடினர். மேலும் துணிச்சலனை சில வக்கீல்கள் மாமனாரை மடக்கி பிடித்து அருகில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து மகிழ்விந்தர் சிங்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் மருமகனே மாமனார் சுட்டுக்கொன்ற சம்பவம் சண்டிகரின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.