செய்திகள் மாநில செய்திகள் சத்தீஸ்கர் மாநிலம்….சுதந்திர தின விழா….!!! Sathya Deva21 August 2024069 views சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், பாஜக எம்.எல்.ஏ. புன்னுலால் மோஹ்லே மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல் தியோ மற்றும் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் அமைதி மற்றும் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஆளுக்கொரு புறாவை பறக்க விட்டனர். அதில் மாவட்ட எஸ்.பி. பறக்க விட்ட புறா, பறக்காமல் கீழே விழுந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து, உடல்நலம் குன்றிய புறாவை நிகழ்ச்சிக்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.