Home செய்திகள் சந்திப்புரா வைரஸ் தாக்குதல்…மக்கள் பயப்பட வேண்டாம் …கவனமாக இருக்க வலியுத்தல் …!!

சந்திப்புரா வைரஸ் தாக்குதல்…மக்கள் பயப்பட வேண்டாம் …கவனமாக இருக்க வலியுத்தல் …!!

by Sathya Deva
0 comment

குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் சந்திபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் கூறுகையில் “சந்திப்புரா வைரஸ் தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் நோய் தொற்று மாதிரி சோதனை செய்து அதன் முடிவுகள் வெளியான பின்பு தான் இந்த வைரஸ் தாக்குதல் பற்றி சொல்ல முடியும் “என்றும் மேலும் இந்த பாதிப்பினால்” மூளை அழற்சி நோய் ஏற்படுமென்று மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் “என்று கூறியுள்ளார்.

இந்த வைரஸ் தாக்கியிருப்பதாக சந்தேகப்படும் 12 நபர்கள் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 6 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த வைரஸ் ராஜஸ்தானில் 2 பேரும் மத்திய பிரதேசத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டது . வைரஸ் தாக்கப்பட்டவர்களின் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு பூனா ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதன் முடிவுகள் 12 முதல் 15 நாட்களில் தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.