செய்திகள் மாநில செய்திகள் குறிப்பிட்ட நாட்களில் கடிக்கும் பாம்பு…. தப்பித்தப்பி பிழைக்கும் இளைஞர்….!! Sathya Deva14 July 20240114 views உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சௌரா கிராமத்தில் துபே என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 2ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார். இவ்வாறாக 6 முறை பாம்பு கடித்து மருவத்துவமனைக்கு சென்று வந்துள்ளார் . இதனால் தன் வீட்டில் இருந்தால் தான் பாம்பு கடிக்கிறது என்று தன் உறவினர் வீட்டிற்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வைத்தும் அவரே கடித்துள்ளது.இது பற்றி பேசுகையில் தன்னை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் பாம்புகள் கடிக்கின்றன என்றும் தன்னை கடிக்க போவது என்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் ஒன்பதாம் முறை தன்னை கடிக்கும்போது நான் இறந்து விடுவேன் என்று பாம்பு கனவில் வந்து கூறியதாக தெரிவித்தார். இந்நிலையில் தொடர்ச்சியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரை எப்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாம்பு கடிக்கிறது என்று மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.