சபரிமலை ஐயப்பன் கோவில்…நிறை புத்தரிசி பூஜை நடைபெற இன்று நடைதிறப்பு …!!!

நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான நிறைப்புத்தரசி பூஜை நாளை நடக்கிறது. எனவே கோவில் நடை சாஸ்திரி மகேஷ் நம்பூதிரி ஆகஸ்ட் 12 மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார் எனக்கு கூறப்படுகிறது. கோவிலில் காலை 5:45 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக அச்சங்கோவில் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டுவரப்படுகின்றன.

அப்போது பூஜைக்குப் பிறகு பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அதன் பின்பு இரவு 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஆவணி மாத பூஜை வருகிற 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ஆம் தேதி மாலை திறக்கப்படும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாதாந்திர பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!