செய்திகள் மாநில செய்திகள் சமமா நடத்தணும்…. பயிற்சிகள் கொடுத்தாச்சு…. திருநங்கைகளுக்கு தெலுங்கானா அரசு செய்த உதவி….!! Inza Dev9 July 2024048 views திருப்பதி தெலுங்கானா மாநில அரசு திருநங்கையர்களை வறுமையில் இருந்து மீட்டெடு ப்பதற்காகவும் அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக தேசிய விருந்தோமல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர் மூலம் மூன்று மாத பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது . இந்த பயிற்சி நிறைவு விழாவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்திரி கோமதி ரெட்டி, வெங்கட் ரெட்டி அவர்கள் ஹோட்டல் நடத்துவதற்கான ஆணையை வழங்கினார் மேலும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கினார். இந்நிலையில் தனியார் அறக்கட்டளை ஒன்று திருநங்கையரின் நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஹோட்டல்கள் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த ஹோட்டல்களை முழுக்க முழுக்க திருநங்கையர்களே நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.