சினிமா செய்திகள் செய்திகள் சரிக்கு சமமாக போட்டி…. 13 கோடி ரூபாய் தரோம்….நடிப்பில் பிசியாக இருக்கும் நடிகைகள்….!! Gayathri Poomani16 June 2024095 views தமிழ் சினிமா உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இதில் தற்போது அஜித்துடன் “குட் பேட் அக்லி” உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்திலும் படங்கள் கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதை போல் சீனியர் நடிகையான திரிஷா நடிகர் கமலஹாசனின் ‘தக்லைப்’ மற்றும் அஜித்துடன் ‘விடா முயற்சி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிப்பதில் நடிகை திரிஷா பிஸியாக இருக்கிறார். அதன் பின்னர் ஆச்சரியமூட்டும் அளவுக்கு த்ரிஷா மற்றும் நயன்தாரா பல படங்களின் நடித்து வருகின்றனர். மேலும், 20 வருடங்களுக்கும் மேலாக திரை உலகில் ஹீரோயின்களாக வளம் வரும் இவர்கள் இருவருமே ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்கள் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வருகின்ற “சிக்கந்தர்” படத்தில் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா 15 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் போது 13 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இதனால் திரிஷாவையும், நயன்தாராவையும் திரைப்பட சம்பளத்தில் ராஷ்மிகா ‘ஓவர் டேக்’ செய்து இருப்பதாக கூறப்படுகிறது.