சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இவர் ஏற்கனவே மூன்று முறை இந்த பதவியில் நீடித்ததால் மேலும் இதில் தொடர விருப்பம் இல்லை என்று ஐ.சி.சி சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அடுத்ததாக இந்த ஐசிசி சேர்மன் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா விண்ணப்பித்திருக்கிறார் .
இந்த பதவிக்காக இவர் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அவர்கள் வழியில் ஜெய்ஷா இணைகிறார். இளம் வயதில் ஐ.சி.சி. சேர்மன் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்கிறார்.