சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா…இவரின் சொத்து மதிப்பு இவ்வளவுவா…?

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்று இருக்கிறார். கிரெக் பார்கிலேவை தொடர்ந்து, வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு ரூ. 124 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் கூட்டமைப்பு வருவாய் தவிர ஜெய் ஷா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் இயங்கி வரும் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். மேலும், குசும் ஃபின்சர்வ் என்ற நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளை ஜெய் ஷா தன் வசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மாத சம்பளத்தை பொருத்தவரை பிசிசிஐ தனது அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்குவதில்லை. மாறாக தினசரி படி வழங்குகிறது.

அதன்படி ஆலோசனை கூட்டங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் துவங்கி ரூ. 80 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. “கிரிக்கெட்டை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மிகமுக்கிய பதவியை ஏற்கும் தருவாயில், நீங்கள் வைத்துள்ள அதீத எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகவும், கிரிக்கெட் எனும் அழகிய போட்டிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்கிறேன்,” என்று ஜெய் ஷா தெரிவித்து இருந்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!