திருநெல்வேலி மாவட்ட செய்திகள் சிகிச்சை கொடுக்க தாமதம்… தகராறு செய்த அரசு ஊழியர்… போலீஸ் விசாரணை….!! dailytamilvision.com17 April 20240106 views திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை கொடுக்க தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்து அறையின் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் அரசு ஊழியரான அவரை சமாதானப்படுத்தியதோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.