சினிமா செய்திகள் தமிழ் சினிமா “சித்தார்த் 40” பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான புகைப்படம்…!!! Sowmiya Balu15 July 20240122 views இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சித்தார்த் . இதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் தனது 40 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், தேவயானி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.