சிம்மம் ராசிக்கு…! எதிர்ப்புகளையும் தாண்டி சமாளித்து விடுவீர்கள்…! வாழ்க்கை தரத்தை உயர்த்துவீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள்.

சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் முடிவெடுப்பீர்கள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனை கண்டிப்பாக சரியாகும். நல்ல மனதிற்கு நல்லது ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுகூலம் ஏற்படக்கூடும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் சூழ்நிலை இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் அனைத்தும் சரியாகும். மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையை சரி கட்டி விட முடியும். இறைவன் அருள் கண்டிப்பாக இருக்கும். மாற்றங்கள் நிகழும் சூழ்நிலை இருக்கும்.

பெண்கள் கவுரவ குறைச்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காதல் உங்களுக்கு பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வதே சிறப்பை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!