பெங்களூர் விதானசவுதா அருகில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் சங்க நிர்வாகி சி.கே. ரவிச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் திடீரென்று கீழே மயங்கி விழுந்தார். உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரை பரிசோதனை டாக்டர்கள் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று யாதகிரி டவுனில் சித்தராமையா ஆதரவாளர் ராஜ்குமார் கணேஷ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மத்திய பிரதேசத்தில் டாக்டர் பரிசோதனைக்கு சென்ற நபர் மருத்துவரின் கண் முன்னே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இந்தியாவின் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி தருவதாக உள்ளது.