நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”அமரன்”.

சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் கோட் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களில் இன்று முதல் அமரன் படத்தின் டீசர் ஒளிபரப்பப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.