உலக செய்திகள் செய்திகள் சீனாவில் ட்ரம்புக்கு ஆதரவா டி-ஷர்ட்டா…. வெளியான புகைப்படம்….!! Sathya Deva16 July 20240103 views அமெரிக்கா முன்னாள் அதிபர் டொன்னால் டிட்ரம் பென்ஸில்வேனியா பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்களால் சுடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது வலது காதில் ரத்தம் வழிந்தவாறு தனது பாதுகாப்பு அதிகாரிகள் சூழ அழைத்துச் செல்லும் போது வலது கையை உயர்த்தி அவர் முழங்கினார். அவர் முழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இணையத்தில் வைரலான ட்ரம்ப் காயப்பட்ட புகைப்படங்களை சீனாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் டி-ஷர்டில் பொறித்து விற்பனை செய்து உள்ளது. சீனாவில் ட்ரம்ப்க்கு ஆதரவாக டி-ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.