உலக செய்திகள் செய்திகள் சீனாவில் மண் சரிவு…15 பேர் பலி…!!! Sathya Deva29 July 2024063 views சீனாவில் கிழக்கு பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனா மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண் சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த மழையால் 36 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.