சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ‌பரவலாக பெய்த மழை… குளுகுளு கிளைமேட்டால் குளிர்ந்த சென்னை…!!!

தென் கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோயம்பேடு, குரோம்பேட்டை, வில்லிவாக்கம், பல்லாவரம், ஆதம்பாக்கம், அண்ணாநகர், தாம்பரம், சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் வெயிலுக்கு மத்தியில் குளுமையாக மழை பெய்தது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!