சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்!” கோட்” படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu12 August 2024086 views தமிழ் திரையுலகில் தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் “கோட்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் முன்பதிவு UK வில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீசாகும் என சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.