சூப்பர்!! “கோட்” படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்…? பதிலளித்த வெங்கட் பிரபு…!!

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்? என வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”வழக்கமாக தயாரிப்பு தரப்பில் இருந்து படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு வாரங்கள் அல்லது 10 நாட்களுக்கு முன்பு தான் ட்ரெய்லர் ரிலீஸ் செய்கின்றனர்.

அந்த வகையில், கோட் படத்தின் ட்ரைலர் இரண்டு வாரங்கள் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டுள்ளனர்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?