சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்! “கோட்” படத்தில் விஜய்-த்ரிஷா இணைந்து நடனம்… வெளியான சூப்பர் புகைப்படங்கள்…!!! Sowmiya Balu6 September 2024085 views இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மட்ட பாடலில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடனம் ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து, இந்த பாடல் படப்பிடிப்பின் போது த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.