சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்! “ராயன்” படக்குழுவினரை பாராட்டிய மகேஷ் பாபு…. வைரலாகும் பதிவு…!!! Sowmiya Balu30 July 2024070 views நடிகர் தனுஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ”ராயன்”. இவரின் 50 ஆவது படத்தை இவர் நடித்தும் இயக்கியும் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படம் குறித்து நடிகர் மகேஷ்பாபு சமூக வலைதள பக்கத்தில், ”தனுஷ் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஏ. ஆர். ரகுமானின் இசை மிக அழகாக இருந்தது” என பல குழுவினரை பாராட்டியுள்ளார்.