சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூர்யா நடிக்கும் “கங்குவா 2″… படம் குறித்து வெளியான அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Inza Dev11 July 20240126 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஞானவேல் ராஜா பங்கு பெற்ற சமீபத்திய நேர்காணலில், இந்த படம் இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.