சூர்யா நடிக்கும் “கங்குவா”… ட்ரைலர் ரிலீஸ் எப்போது…? வெளியான மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23 வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?