சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூர்யா நடிக்கும் “வாடிவாசல்”…. வெளியான சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu25 July 2024082 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் சிசு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக இயக்க இருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே உள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் நிறைவடைந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது எனவும் 2026 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீசாகும் எனவும் சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.