வயநாட்டில் சூழல்மழை -முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில் சூழல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியாமல் திணறினர். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக டெல்லி, பெங்களூரில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அந்தப் பாலம் அமைப்பதற்கான உபகரணங்களை விமான மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்பு இரவு பகலாக பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். இந்த பணியானது நேற்று 5.50 மணிக்கு முடிவடைந்தது. இதை எடுத்து பெய்லி பாலத்தின் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தின் சென்றார். அதைத் தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் இயந்திரங்கள் பாலத்தில் சென்றன. ராணுவத்தினர்கள் 20 மணி நேரத்திற்குள் தற்காலிக பாலத்தை அமைக்க உதவி உள்ளனர். இந்த பாலத்தின் நீளம் 110 அடி ஆகும். இந்த பாலம் 24 டன் வரை எடை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.