செய்திகள் மாநில செய்திகள் சென்னை உயர்நீதிமன்றம்…கூடுதல் நீதிபதி நியமனம்…!!! Sathya Deva20 September 2024063 views சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி. பாலாஜி, நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், நீதிபதிஆர். கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி. திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதோடு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உத்தரவின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 63-ஆக அதிகரித்துள்ளது.புதிய நீதிபதிகள் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.