சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம! ” இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்”… கோட் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu15 August 2024077 views இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்து, ”இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்” என கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.