44
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவரின் திருமண கொண்டாட்டம் கடந்த வாரம் சென்னையில் களைகட்டி இருந்தது. சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் மெஹந்தி நிகழ்ச்சி என பல நாட்கள் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இவர்களுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.