தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தவர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது, லண்டன் நகரில் எடுத்துக்கொண்ட தன் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

