77
மலையாளத்தில் ரிலீசான பிரேமம், நேரம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதயடுத்து, கோல்ட், அவியல் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்போன்ஸ் புத்திரன்,
ரஜினி மற்றும் அஜித் இருவரையும் இணைத்து படம் இயக்குவதற்கு ஒரு கதை தயார் செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். ஒருவேளை அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டால் அவர்களுக்கு பதிலாக கமல் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து அந்த படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்வேன் என அவர் கூறினார்.