சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம!! ” ராயன்” படத்தில் “வாட்டர் பாக்கெட்” வீடியோ பாடல் ரிலீஸ்… படு வைரல்…!!! Sowmiya Balu6 August 20240113 views நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி ரிலீசான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் பிரபலமான பாடலான ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் தற்போது வெளியாகயுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.