Home சினிமா செய்திகள் செம! விறுவிறுப்பாக நடக்கும் “கோட்” பிரமோஷன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

செம! விறுவிறுப்பாக நடக்கும் “கோட்” பிரமோஷன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

அதன்படி, வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். அதன் பிறகு youtube சேனல்களுக்கு நேர்காணல் கொடுக்க உள்ளனர். செப்டம்பர் 5 ம் தேதி இந்த படம் ரிலீசாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.