ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி நேற்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் தரிசனத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு இந்த அனுமதி கிடைக்கும். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.