Home செய்திகள் ஜன்மாஷ்டமி விழா…அதிகளவிலான வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல்…!!!

ஜன்மாஷ்டமி விழா…அதிகளவிலான வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல்…!!!

by Sathya Deva
0 comment

ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நாடு முழுக்க ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி நாடு முழுக்க மக்கள் செலவீனங்கள் அதிகரித்து இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொது செயலாளரும், எம்பி-யுமான பிரவீன் கந்தேல்வால் குறிப்பிட்ட இந்த பண்டிகை காலக்கட்டத்தில் அதிகளவிலான வியாபாரம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக பூக்கள், இனிப்பு வகைகள், ஆடைகள், அலங்கார பொருட்கள், பால், தயிர், வெண்ணெய் மற்றும் உலர் பழ வகைகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ள என்று தெரிவித்தார்.

நாடு முழுக்க ஜன்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்ட நிலையில், வடக்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களில் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஜன்மாஷ்டமி தினத்தில் விரதம் இருந்து, கோவில் மற்றும் வீடுகளை அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.