உலக செய்திகள் செய்திகள் ஜப்பானில் ஒரு லிட்டர் குடிநீர் இவ்வளவு விலையா….? ஆச்சரியத்தில் ஏழை மக்கள்….! Sathya Deva15 July 20240164 views மனிதர்களின் அடிப்படை தேவையாக இருப்பது குடிநீர் தான். ஆனால் ஜப்பான் ஆடம்பர பாட்டிலில் குடிநீர் அடைத்து விற்பனை செய்து வருகிறது . இதற்குப் பெயர் “பிலிகோ ஜுவல்லரி வாட்டர்” என்று கூறப்படுகிறது . இந்த தண்ணீரின் ஒரு லிட்டர் விலை 1390 டாலர்கள் (இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ) என்றும் கூறப்படுகிறது. இந்த பாட்டில் விலை உயர்ந்த கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்பட்டு தங்கத்தால் அலங்காரங்கள் கொண்டு உருவானதாக கூறப்படுகிறது . இந்த பாட்டிலில் இருக்கும் நீரானது ஜப்பானில் கோபேயில் நீர்வீழ்ச்சியிலிருந்து பெறப்பட்ட உயர்தரமான தண்ணீர் என்று கூறுகின்றனர். ஆடம்பரத்தை விரும்புவோர் இதற்காக பணத்தை செலவிட்டு வாங்குவார். ஆனால் எளிமையான மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெறுவதை கனவாக உள்ள நிலையில் பணம் உள்ளவர்கள் குடிக்கும் நீருக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணத்தினை கொடுத்து வாங்குகின்றனர் என குறிப்பிடப்படுகிறது .