ஜம்மு காஷ்மீரில்….இரயில்நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்….!!!

ஜம்மு காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த ஜம்மு-ஜோத்பூர் பயணிகள் விரைவு ரயிலுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் போலீசாருக்கு பயணிகள் குறைதீர் செயலியான ரயில் மாதாத் செயலி மூலம் வந்தாக கூறப்படுகிறது .இதனால் பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் உள்ள காசு பேகு ரயில் நிலையத்தில் திடீரென்று ரயில் நிறுத்தப்பட்டது.

இங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து ரயிலை சோதனை செய்த நிலையில் விஷயமறிந்து பயணிகள் ரயிலை விட்டு வெளியேறினார்கள். ஆனால் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது போலியான மிரட்டல் என்று பின்னர் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் செயலியின் மிரட்டல் வந்த செல் நம்பரை கொண்டு மிரட்டல் விடுவித்த நபர் குறித்து போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!