செய்திகள் மாநில செய்திகள் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. அதிர்ந்த லடாக்….! Sathya Deva12 July 2024080 views ஜம்மு காஷ்மீர் மாநிலம் பராமுல்லா பகுதியில் இன்று மதியம் 12.30 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது கடந்த புதன்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட சற்று குறைவானது என குறிப்பிடப்படுகிறது . இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் லடாக் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.