ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலம்… தேர்தல் தேதி அறிவிப்பு …!!!

ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அதேபோல் ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 1 ம் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகு மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது, மராட்டிய மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்திக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!