உலக செய்திகள் செய்திகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மணிப்பூர் செல்ல வேண்டாம் ….அமெரிக்க அரசு எச்சரிக்கை..!! Sathya Deva26 July 20240108 views அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியாவிற்கு பயணம் செல்பவர்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையை கொடுத்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாய் இருக்கிறது என கூறியுள்ளது. மேலும் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது எனவும் கூறியுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் போன்றவை சுற்றுலா பகுதிகளில் அதிகரித்து வருகிறது எனவும் இதனால் கயவர்கள் சுற்றுலா தளங்கள், போக்குவரத்து முனையம், சந்தை போன்ற இடங்களை குறிவைத்து தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.