ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ ரகு ராமகிருஷ்ணராஜ் அளித்த புகாரியின் அடிப்படையில் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரகு ராமகிருஷ்ணராஜ் அளித்த புகாரில் கடந்த ஆட்சியில் தான் எம்எல்ஏவாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சதி செய்து தம்மை கைது செய்ததாகவும் கைதுக்கு பின் தன்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் அடித்து துன்புறுத்தியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் மீதும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஜெகன்மோகன் கைது செய்யப்படலாம் என்பதால் அம்மாநில அரசியலே பரபரப்பாக இருக்கிறது.