செய்திகள் மாநில செய்திகள் டாக்டரின் உடல் எடை குறைப்பு…வாழ்வை மாற்றியது எப்படி? Sathya Deva20 July 2024084 views பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஒருவர் உடல் எடை குறைப்பு பற்றி தனது பதிவில் பதிந்துள்ளார். அதில் உடல் எடை குறைப்பு எனது வாழ்வை மாற்றியது எப்படி என்பது குறித்து பதிவிட்டுள்ளார். நான் ஒரு கட்டத்தில் 120 கிலோ எடை இருந்தேன். தற்போது இதனை கணிசமாக குறைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். அவர் ஒருநாள் மெட்ரோவில் பயணம் செய்ய ரயில் நிலையத்திற்கு கீழ்த்தளத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது மேல்தளத்தில் மெட்ரோ ரயில் வரும் சத்தமும் அதற்கான அறிவிப்பும் கேட்கிறது. அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் அடுத்த ரயில் வரும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. நான் 5- 10 வினாடிகளில் முதுகில் கனமான பேக்குடன் வேகமாக, உயரமான படிகளின் ஏறி கூட்டத்தை தாண்டி மெட்ரோ ரயிலில் ஏறிவிட்டேன். நான் முன்பு 120 கிலோவில் இருக்கும் போது இந்த நிகழ்வை யோசித்து கூட பார்க்க முடியாது என கூறியுள்ளார். அப்போது நான் ஒரு பாண்டா போல இருப்பேன் என கூறியுள்ளார். தினமும் நான் கடினமாக உழைத்தேன் இன்றும் அப்படிதான் எனது உடல்நிலையிலும் உடல் தகுதியிலும் நிறைய செலவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.