உலக செய்திகள் செய்திகள் டாக்டர் கொலை விவகாரம்…மாணவ அமைப்புகள் போராட்டம்…போலீசார் தடியடி…!!! Sathya Deva27 August 2024095 views பெண் டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக சில மாணவ அமைப்புகள் நீதி கேட்டு தடையை மீறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் புறப்பட்டு வந்தனர். தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் பங்கேற்ற அவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டனர். ஹவுரா பாலம் மற்றும் சந்திரகாச்சி ரெயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து போலீசார் அவர்கள்மீது தடியடி நடத்தியதால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. இதற்கிடையே, கொல்கத்தாவில் போலீசார் நடந்து கொண்ட விதம் பற்றிய புகைப்படங்கள், ஜனநாயக கொள்கைகளை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாநில அரசின் இந்த செயலைக் கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.