உலக செய்திகள் செய்திகள் டிரம்ப் ஆதரவாளர் அதிர்ச்சி….தேர்தல் களம் பரபரப்பு….!!! Sathya Deva29 July 2024045 views அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதை அடுத்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னால் அதிபர் பார்க் ஒபாமா கமலஹரிஷ்க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார் . மேலும் இவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கமலா ஹாரிஷ் பிரச்சாரத்தை தொடங்கிய ஒரு வார காலத்தில் 200 மில்லியன் டாலர் நிதியாக திரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியில் 66% பேர் முதல்முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டது. முன்னதாக டெனால்ட் டிரம்ப்க்கும் கமலஹரிசுக்கும் தேர்தல் கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் கமலஹாரிஸ் 2 சதவீதம் அதிகமாக வாக்குகளை பெற்றார். இது ட்ரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவில் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.