உலக செய்திகள் செய்திகள் டி-ஷர்டில் கியூ- ஆர் குறியீடா… நிதி திரட்டிய வாலிபர்….!!! Sathya Deva19 July 2024080 views நல்ல நோக்கத்திற்காக “கிரவுட் பண்டிங்” முறையில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கை பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டெல்லியில் ஒரு வாலிபர் கீயூ -ஆ ர் குறியுடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டி வந்துள்ளார். டெல்லியை சேர்ந்த பூஜா சன்வால் என்ற பெண் கன்னோட் ப்ளேஸ் பகுதியில் ரோகித் சலூஜா என்ற வாலிபர் அணிந்திருந்த கியூ-ஆர் டி-ஷர்ட்டை பார்த்தார். அதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சோனு என்ற முடி திருத்தும் தொழிலாளியின் செல்போனை யாரோ திருடி விட்டனர். யாரிடமும் முரட்டுத்தனமாக பேசாத அன்பான உள்ளம் கொண்ட அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க புதிய போன் வாங்கி கொடுக்க நிதி கேட்பதாக கூறப்பட்டிருந்தது. பூஜா சன்வால் அவரது இணையத்தில் பதிந்த நிலையில் சும்மர் 77 பேர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஒரு நிறுவனம் அந்த தொழிலாளிக்கு புதிய போனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.