காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவ மழை பெய்வதால் தூக்கி எறியப்பட்ட பொருட்கள், பழைய பாத்திரங்கள், பூந்தொட்டிகளில் நீர் தேங்குகிறது. இதனால் டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர்ந்து டெங்கு நோய் வர காரணம் ஆகிறது. எனவே தூக்கி எறியப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பொம்மைகள் போன்றவற்றை வீட்டை சுற்றி போட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
தேவை இல்லாமல் வீட்டை சுற்றி இருக்கும் பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க கூடாது. மேலும் பயன்படுத்தாத சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவாத தொட்டிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி இருந்தால் ஏடிஸ் கொசுக்கள், டெங்கு வைரசுடன் உருவாகி நோயை பரப்புகிறது. குறுகிய காலத்தில் ஏராளமான கொசுக்கள் உருவாகும்.
மலேரியா, காய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ள காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே உயிர் சிகிச்சை பெறுவதன் மூலம் காய்ச்சலை எளிதில் குணமாகலாம்.
தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்ச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் குடித்த பிறகு கொசு புகாதவாறு தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம் என செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.