செய்திகள் மாநில செய்திகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…மத்திய அமைச்சர் மனைவி பலி…!!! Sathya Deva19 August 20240111 views ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்துள்ளது. இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜூல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சலுக்கு தலைநகர் புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜூல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினர். மேலும் ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜூல் ஓரம்-ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.