சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் வகையில் அவரது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம் பெறும் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான (2024 ) ஹால் ஆப் பேம் பட்டியலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் இருவரும் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்று பெருமையை இவர்கள் பெற்றனர் என கூறப்படுகிறது.
மேலும் விஜய் அமிர்தராஜ் 1970 முதல் 1993 ல் ஓய்வு பெறும் வரை விளையாடினார் என கூறப்படுகிறது. இவர் 15 ஏ.டி.பி ஒற்றையர் பட்டங்களையும் 399 போட்டிகளையும் வென்று உலகில் 18 வது இடத்தை பிடித்தார். மேலும் 1974 மற்றும் 1987இல் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார். லியாண்டர் பயஸ் டென்னிஸ் அரங்கில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டங்களை பெற்றார். இவர் 1996 இல் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.