டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம்…இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது…!!!

தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!