செய்திகள் மாநில செய்திகள் டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு…. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….! Inza Dev12 July 20240103 views டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கர்நாடக தரப்பில் அணைகளுக்கு நீர் வரத்து 28 சதவீதம் குறைவாக உள்ளது எனவும் நீர் திறப்பது தொடர்பான முடிவுகள் ஜூலை 25ஆம் தேதி மேல்தான் கூறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது . இந்த வாதத்தை கேட்ட தமிழக பிரதிநிதி கடந்த வருடம் போதுமான நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தற்போது கர்நாடகாவில் போதுமான நீர் உள்ளது எனவே தங்களுக்கு திறந்து விட உத்தரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டு மாநிலங்களின் வாதங்களை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஜூலை மாதம் முழுவதும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.