செய்திகள் மாநில செய்திகள் டெல்லியில் பரபரப்பு… இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்தது….!!! Sathya Deva2 August 20240107 views இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளின் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் வடமேற்கே உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதைப்பற்றி தகவல் அறிந்த மீட்புத் துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் இதுவரை ஒரு பெண் உட்பட 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கி கொண்டு இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.